» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : குமரி ஆட்சியர் தகவல்

சனி 16, நவம்பர் 2019 6:37:30 PM (IST)

படித்த மற்றும் தொழில்பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2018-2019-ஆம் ஆண்டில் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் பொருட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 23.11.2019 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கலைக் கல்லூரி, நாகர்கோவிலில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், போன்ற பெருநகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இணைப்பு கட்டிடம், இரண்டாம் தளம், நாகர்கோவில் - 1, தொடர்புக்கு: 04652–279275, 04652–278449, மின்னஞ்சல் : dpiu_kki@yahoo.com தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 8-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி(ஐடிஐ), பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, நர்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 40 வயதிற்குட்பட்ட ஆண்,பெண் இருபாலரும் தங்களது கல்விசான்றிதழ், சாதிசான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிசான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Nov 17, 2019 - 09:26:20 AM | Posted IP 117.2*****

உள்ளூரில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்தால் நன்று.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory