» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதன் 22, மே 2019 11:03:36 AM (IST)

வேலூர் மாவட்டம்,  சத்துவாச்சாரியில்   தொடங்கப்படவுள்ள பளு தூக்கும்  முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, குமரி மாவட்டத்தில் 7, 8, 9, மற்றும் பிளஸ் 1 வகுப்புகள், கல்லூரி இளநிலை- முதுநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கவுள்ள மாணவ, மாணவிகள் பளுதூக்குதல் விளையாட்டில் திறமை இருப்பின் சத்துவாச்சாரி  பளு தூக்கும்  முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்  சேரலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் கடந்த 18 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

இம்மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான தேர்வு,  சத்துவாச்சாரியில் இம்மாதம் 30 ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.  மாணவர்கள் முந்தைய வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  1.1.2019இல் 14 வயதும், பிளஸ் 1 மாணவர்களுக்கு 16 வயதும், கல்லூரி மாணவர்களுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory