» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சனி 21, பிப்ரவரி 2026 11:15:13 AM (IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)


