» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள மொத்தம் 64 மாவட்டங்களில், சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு:
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாகப் பலி விபரம்:
காக்ஸ் பஜார் மாவட்டம்: 28 பேர் பலி.
சட்டோகிராம் பகுதி: 13 பேர் பலி.
பந்தர்பன் பகுதி: 6 பேர் பலி.
பலியானவர்களில் பெரும்பாலோர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர். மேலும், சிட்டகாங்க் மாகாணத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)


