» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 21, ஜனவரி 2026 4:05:36 PM (IST)


ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

அப்போது டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory