» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நைஜீரியாவில் தேவாலயங்களுக்குள் புகுந்து 170 பேர் கடத்தல் : ஆயுத கும்பல் அட்டகாசம்

புதன் 21, ஜனவரி 2026 8:32:20 AM (IST)

நைஜீரியாவில் தேவாலயங்களுக்குள் புகுந்து 170-க்கும் மேற்பட்டோரை ஆயுத கும்பல் கடத்திச்சென்றது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 250-க்கும் மேற்பட்ட ஆயுத கும்பல்கள் செயல்படுகின்றன. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பள்ளிகள், தேவாலயங்களுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கடத்தி செல்கின்றனர். பின்னர் அவர்களை விடுவிக்க பணத்தை கேட்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாக உள்ளது.

அந்தவகையில் கடந்த நவம்பர் மாதம் நைஜர் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்குள் ஆயுத கும்பல் நுழைந்தனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்தி சென்றனர். சர்வதேச அளவில் இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் கதுனா மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்து அவர்களை கடத்தி சென்றது..

இதேபோல் அங்குள்ள 3 தேவாலயங்களில் இருந்து 170-க்கும் மேற்பட்டோரை ஆயுத கும்பல் கடத்தி சென்றது. அவர்களில் 12 பேர் அங்கிருந்து தப்பி ஓடி வந்தனர். எனவே கடத்தல்காரர்களிடம் உள்ள மற்றவர்களை மீட்கும் பணியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கடத்தல் கும்பலை ஒழிக்க அமெரிக்காவுடன் இணைந்து நைஜீரிய ராணுவம் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory