» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க வரி : டிரம்ப் எச்சரிக்கை!
சனி 17, ஜனவரி 2026 10:19:13 AM (IST)
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம் என கூறினார். மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத, எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

