» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு: சீனா 1 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பு

செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:10:01 PM (IST)



இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக சீனா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக  1 மில்லியன் டாலர் அளித்துள்ளது.

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை சென்றடைந்தன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது.

இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதி உதவி அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory