» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 500-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அந்த பிராந்தியத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பதில் தாக்குதல்
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முக்கிய விமான நிலையங்கள் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அஹமதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்க வந்த ட்ரோன்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதன் துகள்கள் சிதறி விழுந்ததில் நிலையத்தின் ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து லெபனான் பிரதமர் நவாப் சலாம் கூறுகையில், "ஹிஸ்புல்லா அமைப்பினர் மேற்கொள்ளும் இந்தத் தாக்குதல்களுக்கும் லெபனான் அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மீது தாக்குதல்
ஏமன் வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஓமன் நாடு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மார்ஷல் தீவுகளுக்குச் சொந்தமான 'ஆயில் டேங்கர்' கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடரும் பதற்றம்
ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது அங்குள்ள ஆயுதக் குழுக்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்ட நிலையில், இருதரப்புத் தாக்குதல்களும் தொடரும் எனத் தெரிகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)

அமெரிக்காவில் காகித ஆலையில் நச்சு ரசாயன தொட்டி வெடித்து விபத்து - 11 பேர் பலி? மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 30, மே 2026 12:53:29 PM (IST)


