» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய பயணம் 3-வது முறையாக ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:57:07 AM (IST)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதம்ர மோடி ஆவார். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய தேதியை கோருவார் எனத் தெரிகிறது. நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும். கடந்த செப்டம்பர் 9-ந்தேதி இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17-ந்தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்!
திங்கள் 24, நவம்பர் 2025 11:14:09 AM (IST)

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது
ஞாயிறு 23, நவம்பர் 2025 12:49:41 PM (IST)

துபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:48:55 AM (IST)

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் ஒலித்த தமிழ் பாடல்: கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
சனி 22, நவம்பர் 2025 11:21:11 AM (IST)

இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 11:02:16 AM (IST)

ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)


.gif)