» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)
உக்ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. அதை ஜெலன்ஸ்கி நிராகரித்ததால், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. போரை நிறுத்த சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதற்கிடையில் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்குப் பிறகு பற்றி எரியும் கட்டிடங்கள், சேதம் அடைந்த இடங்களின் வீடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தாக்குதலில் டெர்னோபில் பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமாகி உள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டர்கள் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும் பற்றி எரியும் கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
கந்தசாமிNov 20, 2025 - 02:36:04 PM | Posted IP 104.2*****
சளைக்காமல் அடிமேல் அடிவாங்கும் உக்ரைன் அமெரிக்கா உன்னை வைத்து பிழைப்பு நடத்துகிறது தெரியாத அப்பாவியாக இருக்கிறான் ஜெலன்ஸிகி
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:48:55 AM (IST)

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் ஒலித்த தமிழ் பாடல்: கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
சனி 22, நவம்பர் 2025 11:21:11 AM (IST)

இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 11:02:16 AM (IST)

ரஷ்யாவுக்கு நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் மீது கடும் நடவடிக்கை : டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:54:26 AM (IST)

வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திங்கள் 17, நவம்பர் 2025 4:04:28 PM (IST)

சவுதி அரேபியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து : 42 இந்தியர்கள் பலி
திங்கள் 17, நவம்பர் 2025 11:59:28 AM (IST)


.gif)
உண்மNov 21, 2025 - 05:02:19 PM | Posted IP 172.7*****