» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்களுக்கு வரி குறைப்பு: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:37:26 PM (IST)
அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரியை குறைத்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளின் பொருட்கள் மீது கணிசமாக வரியை உயர்த்தி அறிவித்தார். இதனால் உள்நாட்டு பொருளாதார நிலை உயரும் என்று அவர் திட்டமிட்டார். ஆனால் உயர்த்தப்பட்ட வரிகளின் எதிரொலி, அமெரிக்க நுகர்வோர்களை பாதிப்பதை இப்போதுதான் டிரம்ப் உணரத் தொடங்கி உள்ளார்.சமீப காலமாகவே அமெரிக்க நுகர்வோர்கள் பொருளாதார கவலைகளை வெளியிட்டனர். இதனால் பலவிதமான சலுகைகளை அறிவித்து மக்களை கவர நினைத்தார் டிரம்ப். இருந்தபோதிலும் சமீபத்தில் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சியில் நடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.
இதையடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு டிரம்ப் பணிய ஆரம்பித்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் வரிகுறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான வரிகளை குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான டிரம்பின் வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோர் பாதிக்க ஒரு முக்கிய காரணமாகும். இதேபோல தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலாப் பொருட்கள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் மீதான வரிகளையும் நிர்வாக உத்தரவு நீக்குகிறது. இவற்றில் பல பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈக்வடார், கவுதமாலா, எல் சல்வடார் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை எளிதாக்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்த பிறகு டிரம்ப் இந்த பொருட்களின் வரியை குறைத்து அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)

அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி
வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)

ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

