» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)
அமெரிக்காவிடமிருந்து பல்வேறு அழுத்தம், தடைகள் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா நேற்று கூறியதாவது: அமெரிக்காவிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் மற்றும் தடைகள் உள்ள போதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். தள்ளுபடிகளைப் பொறுத்தவரை அது ஒரு வணிக ரகசியம். எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு தள்ளுபடியின் அளவு 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறும் போது, "இந்தியா சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், எங்களது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)


.gif)