» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வழங்கினார்!
வியாழன் 19, டிசம்பர் 2024 3:40:05 PM (IST)

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியால் ‘சர்’ பட்டம் (நைட்ஹுட்) வழங்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்பு ‘திரு’ என்பதற்கு பதில் ‘சர்’ என போட்டுக்கொள்ளலாம். இந்த வகையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கும், அவரது மனைவிக்கும் ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ‘சர்’ பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தி டார்க் நைட்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை இணைந்து தயாரித்து திரையுலகில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதற்காக நோலன் தம்பதியினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது, நோலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹைமர்’ படம் குறித்த தனது பாராட்டை இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
