» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி

புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

தாய்லாந்தில் ராணுவ தளபதியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பணியிடை நீக்கம் செய்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் இரு நாடுகளின் எல்லையில் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் எல்லை பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இதனையடுத்து தாய்லாந்தின் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதிக்கு கம்போடியா தடை விதித்தது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான அனைத்து எல்லைகளையும் தாய்லாந்து மூடியது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய செனட் சபையின் தலைவருமான ஹன் சனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ஹன் சனை அவர் உறவுமுறை கூறி அழைத்தார். மேலும் தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசினார். அவர்கள் இருவரும் பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும், இதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பேடோங்டர்ன் ஷினவத்ரா கூறினார். ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனை தொடர்ந்து அவர் பதவி விலக கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஷினவத்ரா நேர்மையற்றவர் என்ற முறையில் அவரை பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் 7-2 என்ற வாக்குகளில் நிறைவேறியது.

எனவே பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பணியிடை நீக்கம் செய்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்விரகுல் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் ஒப்புதல் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory