» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு!!
புதன் 18, டிசம்பர் 2024 5:21:43 PM (IST)

புற்றுநோய்க்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என ரஷ்யா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் அளித்த பேட்டியில், 'புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றார்.
பரிசோதனைகளின்போது, இந்த தடுப்பூசியானது சிறப்பாக செயல்பட்டு புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவுவதை தடுத்ததாக கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
