» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மாஸ்கோவில் குண்டு வெடிப்பு: ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி பலி!
செவ்வாய் 17, டிசம்பர் 2024 3:59:54 PM (IST)
மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய ராணுவத்தில் உயர் பொறுப்பு வகித்த அதிகாரி உயிரிழந்தார்.

இதன் விளைவாக கிரிலோவ் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரும் பலியானார்கள். இந்த சம்பவம் ரஷ்ய அரசு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரஷ்ய புலனாய்வு விசாரணை குழு கூறியதாவது: மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்.உக்ரைன் ராணுவம் இத்தகைய குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவியல் விசாரணையை தொடங்கி இருக்கிறோம். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு ரஷ்ய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறுகையில், கிரில்லோவ் தாய் நாட்டுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். சிரியா, உக்ரைன் நாடுகளில் அமெரிக்கா, நேட்டோ படையினரின் ரசாயன, உயிரியல் ஆயுத ஆய்வுக்கூடங்கள் பற்றி கண்டறிந்து அம்பலப்படுத்தினார். தடை செய்யப்பட்ட வழிமுறைகளில் சாலிஸ்பரி, ஆம்ஸ்பரியில் பிரிட்டன் மேற்கொண்ட ஆயுத சோதனைகள் பற்றியும் அம்பலப்படுத்தினார். தாய் நாட்டை மிகவும் நேசித்தார் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
