» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு: வாலிபருக்கு 100 ஆண்டுகள் சிறை!
திங்கள் 16, டிசம்பர் 2024 8:56:44 PM (IST)

அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டைலர் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மெக்டோனல் (32). இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்டர்சனில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களை நோக்கி அவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து கிறிஸ்டோபர் தனது சகோதரர் ஷான் மெக்டோனல் (34) மற்றும் அவரது மனைவி கெய்லி லூயிஸ் (29) ஆகியோருடன் காரில் ஏறி தப்ப முயன்றார். எனவே போலீசார் அவர்களது காரை வேகமாக பின்தொடர்ந்தனர். இதனால் போலீஸ் ஜீப்பை குறிவைத்தும் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த காரில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு லாஸ் வேகாஸ் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர் தன்மீதான 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே கிறிஸ்டோபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் 2120-ம் ஆண்டுக்கு பிறகே அவருக்கு பரோல் வழங்கலாம் எனவும் கோர்ட்டு அனுமதித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
