» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென் கொரியாவில் அதிபர் பதவி நீக்கம்: மக்கள் கொண்டாட்டம்!
திங்கள் 16, டிசம்பர் 2024 12:53:52 PM (IST)

தென் கொரியாவில் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று தலைநகர் சியோலில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 3-ந்தேதி அங்கு ராணுவ அவசர நிலையை அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு 2-வது முறையாக அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தலைநகர் சியோலில் உற்சாக குரல் எழுப்பி பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் மக்கள் அமைதி காக்கும்படி அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
