» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
திங்கள் 16, டிசம்பர் 2024 11:26:55 AM (IST)

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் காலமானார்.
மும்பையை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார். உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசேன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசேன் தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்நிலையில், ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜாகிர் உசேன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
