» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிகாரபூர்வமாக வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 4:06:01 PM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று (ஆக. 6) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 99 சதவிகிதத்தினரின் வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக துணை அதிபர் வேட்பாளர் யார்? என்பதை கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி தேசிய ஒருங்கிணைப்புச் செயலர் ஜேசன் ரே விரைவில் அவரிடம் அங்கீகாரச் சான்றிதழை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பது, தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

நிகோலஸ் மதுரோ விரைவில் நாடு திரும்புவார்: பேரவையில் மகன் உருக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 11:59:27 AM (IST)

நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)

வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பணியாற்ற தயார் : ஜப்பான் பிரதமர்
திங்கள் 5, ஜனவரி 2026 11:53:40 AM (IST)

