» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!
வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன்(28), ஒரு முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சவூதி கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப்(29) உடன் திருமணம் செய்து கொண்டார். இந்த விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது. சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ராணி ரானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தம்பதிகளின் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. மக்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்க நேற்று அரசு விடுமுறையை அரசு அறிவித்து இருந்தது. இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று வெகுவிமர்சையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஜோர்டான் அரச திருமணத்தின் விருந்தினர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பிடன், பிராந்திய மன்னர்கள், நெதர்லாந்தின் மன்னர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)


.gif)