» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய பயங்கர புயல்கள்: 32பேர் உயிரிழப்பு

திங்கள் 3, ஏப்ரல் 2023 12:22:54 PM (IST)



அமெரிக்காவில் அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2-ந் தேதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கியன. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களை பந்தாடின. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் சிக்கி சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாகாணங்களில் பல நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்னிசி மாகாணம், வின், அர்கனாஸ், சுல்லிவன், இண்டியானா நகரங்கள் மற்றும் இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதிகளில் பொதுமக்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புயலால் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பல புயல்கள் தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory