» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜனநாயகத்தை மதிக்கிறோம்: ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து!

சனி 25, மார்ச் 2023 10:20:32 AM (IST)

ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரிடம் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில் மின்னஞ்சல் வழியாக கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அனுப்பப்பட்ட பதிலில், "சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எந்தவொரு ஜனநாயக தேசமாக இருந்தாலும் சட்டம் மற்றும் நீதித்துறை சுதந்திரமுமே அதன் மூலக்கல். மற்றபடி இப்போதைக்கு வழக்கு குறித்து நாங்கள் ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது. 

இந்தியாவும், அமெரிக்காவும் சில ஜனநாயக மாண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதை நிலைநிறுத்த அமெரிக்க அதிகாரிகள் எப்போதுமே இந்திய அரசுடன் தொடர்பில் இருக்கின்றனர். இதுதான் அமெரிக்கா - இந்தியா உறவின் அடித்தளம்." என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது இதன் காரணமாக தனிப்பட்ட கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory