» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல் : வர்த்தக போர் முடிவுக்கு வந்தது!
திங்கள் 12, மே 2025 5:03:09 PM (IST)
90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. இதனால் அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 145% ஆக அதிகரித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 125 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில், தற்போது வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
மேலும், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைக்கவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)