» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்

புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக சமீப நாட்களில் இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து ஐ.நா.வின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார். 

அதில், வங்கதேசத்தின் நிலைமை குறித்து ஐ.நா. மிகவும் கவலைப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் போலவே, பெரும்பான்மை சமூகத்தைச் சாராத மக்களும் பாதுகாப்பாக உணர வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அத்தியாவசியமானது. ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசாங்கம் எடுக்கும் என்று ஐ.நா. எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory