» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!
புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)

சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம், வானில் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து வேண்டுமென்றே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கையில், ‘கடந்த மார்ச் 21ம் தேதி அன்று குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 737-800 ஜெட்லைன் விமானம், வானத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலியாகினர். அந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட விவரத்தை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி விமானம் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த போது கீழ்நோக்கி 9,075 அடிக்கு வெறும் 2.15 நிமிடங்களில் வந்துள்ளது. இதனை ஃப்ளைட் ரேடார் 24 என்ற ஃப்ளைட் டிராக்கர் தெரிவித்துள்ளது.
அடுத்த 20 வினாடிகளுக்குள் 3,225 அடி உயரத்தில் விமானம் கீழ் நோக்கி வந்தது. பின்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது, அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விமானி அறையில் இருந்த யாரோ ஒருவர் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கை குறித்து சீன விமான நிறுவனம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை!
வியாழன் 30, ஜூன் 2022 12:07:33 PM (IST)

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்
புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST)

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி
புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST)

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை
செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!
திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!
சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)
