» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் வடிவமைத்துள்ள 'விக்ரம்-1' ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய மண்ணிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்று விண்கலங்களைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் ஏவுதல் திட்டம் இதுவாகும்.
முழுவதும் கார்பன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு 7 மாடிகள் கொண்ட பல நிலைகளாக இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஆகமன்' எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை நண்பகல் 11:30 மணிக்கு ராக்கெட் ஏவப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கவுன்டவுண் முடியும் தருவாயில் (4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்தபோது) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் பொறியாளர்களால் கோளாறு சரிசெய்யப்பட்டு, நண்பகல் 12:06 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
புவி ஈர்ப்பு விசையைக் கடந்து பயணித்த இந்த ராக்கெட், பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ உயரமுள்ள சுற்றுப்பாதையில் ஆய்வு கருவிகளை (பேலோடுகளை) நிலைநிறுத்தியது. இந்த விக்ரம்-1 ராக்கெட், 350 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என விண்வெளி ஆய்வு மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)


