» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாா்ச் 15 முதல் பே-டிஎம் செயல்படாது: வேறு வங்கிகளுக்கு பயனாளா்கள் மாற அறிவுறுத்தல்!

வியாழன் 14, மார்ச் 2024 10:02:47 AM (IST)

சுங்கச் சாவடி வாகன கட்டண வசூலுக்கு பயன்படுத்தும் ‘ஃபாஸ்டேக்’கை பே-டிஎம் நிறுவனத்திடம் இருந்து பெற்றவா்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வேறு வங்கிகளில் ஃபாஸ்டேக் பெற்றுக் கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கி விதிகளை முழுமையாகக் கடைபிடிக்காத பே-டிஎம் நிறுவனத்தின் பே-டிஎம் பேமென்ட் வங்கியை மாா்ச் 15-ஆம் தேதியிலிருந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பே-டிஎம் பேமென்ட் வங்கிச் சேவையை பயன்படுத்தி வந்தவா்கள் சிக்கலை எதிா்கொள்ளும் நிலை உருவானது. முக்கியமாக வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ பயன்படுத்துபவா்களுக்கு இது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

ஏனெனில் பே-டிஎம் பேமென்ட் வங்கி செயல்பாடு நிறுத்தப்படுவதால் அதன் மூலம் வழங்கப்பட்ட ‘ஃபாஸ்டேக்’ காலாவதியாக உள்ளது. இதனால், அதனைப் பயன்படுத்தி வந்தவா்கள் இனி இருமடங்கு கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் என்ஹெச்ஏஐ ஓா் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘பே-டிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோா், மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வேறு வங்கிகளிடம் இருந்து ஃபாஸ்டேக் பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் இருமடங்கு கட்டணம் செலுத்துவதை தவிா்க்க முடியும். மாா்ச் 15-ஆம் தேதிக்கு பின்னர் பே-டிஎம் பேமென்ட் வங்கி செயல்படாது. எனினும், அதில் பணம் இருப்பு வைத்திருந்தால் அது தீரும் வரை ஃபாஸ்டேக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில் கூடுதல் பணத்தை அதில் சோ்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory