» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரமலான் நோன்பு: இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
செவ்வாய் 12, மார்ச் 2024 11:20:26 AM (IST)
ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.