» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உறவினர் திருமணத்தில் பங்கேற்க பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல்

சனி 24, பிப்ரவரி 2024 12:34:21 PM (IST)



உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல் வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி ரமேஷ்பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயா் நீதிமன்றத்தில் 10 நாள்கள் பரோல் கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் சிறையில் சரணடைந்த 11 குற்றவாளிகளில் 10 நாள்கள் பரோல் பெற்றிருக்கும் இரண்டாவது குற்றவாளி இவராவார்.உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு அளித்த பிரமாணப்பத்திரத்தில், 2008ல் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து சந்தனா 1,198 நாள்கள் பரோலையும், 378 நாள்கள் விடுமுறையையும் அனுபவித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறிப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் அனைவரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 பேரின் விடுதலையை ரத்து செய்ததுடன், அவா்களை சிறையில் சரணடைய கடந்த ஜன.8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் கோத்ரா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்தனா்.

அவா்களில் ரமேஷ்பாய் சந்தனா என்பவா், மாா்ச் 5-ஆம் தேதி தனது உறவினா் திருமணத்தில் கலந்துகொள்ள பரோல் கோரி, குஜராத் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை உரிய அமா்வுக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்குமாறு அந்த நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உயா் நீதிமன்ற நீதிபதி குஷ்பு வியாஸ் உத்தரவிட்டாா். அதன்படி மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, 10 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோதியா என்பவருக்கு பிப்.7 முதல் பிப்.11 வரை பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory