» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பற்களை அழகுப்படுத்தும் ஸ்மைல் டிசைன் அறுவை சிகிச்சை: மணமகன் உயிரிழப்பு!

புதன் 21, பிப்ரவரி 2024 11:33:58 AM (IST)

ஹைதராபாத்தில் திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த லக்‌ஷ்மி நாராயண் விஞ்சன்(28) என்பவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி தனியார் பல் மருத்துவமனையில் பற்களை அழகுப்படுத்தும் ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சிறிது நேரத்திலேயே விஞ்சன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாக விஞ்சனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் அளித்த விளக்கத்தில், "திருமணம் நடைபெறவிருப்பதால் உடனடியாக பல் அறுவை சிகிச்சை செய்ய விஞ்சன் கோரினார். அறுவை சிகிச்சை முறைப்படி செய்யப்பட்டது. அவருக்கு எந்த மருத்துவ பிரச்னையும் இல்லை.இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே மயக்க மருந்து அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவரிடம் நன்றாகதான் பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காவல்துறைக்கு விடியோ அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory