» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது: பிரதமர் மோடி நன்றி

வியாழன் 21, அக்டோபர் 2021 12:01:09 PM (IST)

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 9 மாதங்களில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 100 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா். 

நாட்டில், மக்கள் தொகையின் அடிப்படையில் உத்தரகண்டில் அதிகபட்சமாக முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சாதனையைக் கொண்டாடும் பொருட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுகாதாரத்துறையினர் கலந்துகொள்ளும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவின் வரலாற்று நாள் இன்று. 130 கோடி இந்தியர்களின் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் வெற்றியை இன்று காண்கிறோம்.  100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நாடு, இந்த சாதனையை அடைய உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory