» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

23 லட்சம் மாணவர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு!

திங்கள் 6, மே 2024 5:42:20 PM (IST)

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு துரோகம் இழைத்துவிட்டதாக, பாஜக மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினர். இதனிடையே ராஜஸ்தானில் நீட் தேர்வு நடைபெறும் போது வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட 20 வயது நபர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, தேர்வுகள் துவங்கிய பின்னர்தான் இந்த வினாத்தாள்கள் கசிந்ததாக விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பி-யான ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ’நீட் வினாத்தாள் கசிந்துள்ளதன் மூலம் 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின்னர் கல்லூரியில் இடம் கிடைப்பது ஆகட்டும், அரசு வேலை கிடைப்பது ஆகட்டும், மோடி அரசு அனைவருக்குமே ஒரு சாபமாக மாறிவிட்டது. 

கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் கையாலாகாத்தனத்தால் மக்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கான விலையை கொடுத்து வருகின்றனர். தங்கள் வருங்காலம் சிதைக்கப்பட்டதை அறிந்து கொண்டுள்ள அவர்கள், பேசுவதற்கும், அரசாங்கம் நடத்து கொள்வதற்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இது போன்ற வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவோம் என உறுதியளித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமாக மற்றும் வெளிப்படைத்தன்மையான சூழலை உருவாக்கி தருவதே எங்களது கேரன்டி.’ என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory