» சினிமா » செய்திகள்
50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தபோது 1977-ஆம் ஆண்டில் அவரது திரைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் எச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை வாரியத்தின் 'ஏ' சான்றிதழுடன் இன்று (ஜூலை 23) 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் அதிகாலை 4.30 மணிக்கே காட்சிகள் தொடங்கின. தவெக தலைவராகப் போட்டியிட்டுத் தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் கடைசித் திரைப்படம் இதுவென்பதால், தொண்டர்களும் ரசிகர்களும் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன் 1977-இல் எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களில் அவர் நடித்த 'மீனவ நண்பன்' திரைப்படமும், ஆறு மாதங்களில் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' திரைப்படமும் வெளியாகின. அதேபோன்று தற்போது முதல்வர் விஜய் பதவியேற்ற இரண்டு மாதங்களில் அவரது 69-வது திரைப்படமான 'ஜனநாயகன்' திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்கள் வாயிலாக அரசியலைப் பேசியது போன்றும், அவரது திரைப்படங்களுக்கு அக்காலத்தில் அரசியல் ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டது போன்றும், விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும் தணிக்கைச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது வெளியாகியுள்ளது. தற்போதைய அமைச்சர்கள் பலரும் இத்திரைப்படத்தைக் கண்டு வரும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கான முன் பதிவுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீர் வருகை!
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:40:34 PM (IST)

கார் ரேஸில் விபத்து: நடிகர் அஜித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:31:00 PM (IST)

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

