» சினிமா » செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!

திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)



இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை என்றும், அண்மையில் மத்திய அரசின் குறும்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர். ரஹ்மான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில் தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory