» சினிமா » செய்திகள்

கண்ணப்பா படத்தில் வன்முறை காட்சிகள்: சென்சாரில் எதிர்ப்பு!

வியாழன் 26, ஜூன் 2025 10:39:28 AM (IST)



கண்ணப்பா திரைப்படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை உள்ளதால்  பல காட்சிகளை நீக்க சென்சார் குழு பரிந்துரை செய்துள்ளது. 

தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக் ஷய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை காட்சிகளுக்கும் சில வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்றனர். இதையடுத்து மறு ஆய்வுக் குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டது. 

அதிகமான ரத்தம், இறந்த உடல்கள், மனித உடலை அம்பு துளையிடும் காட்சிகள் உள்பட பல காட்சிகளை நீக்க, மறு ஆய்வுக் குழு அறிவுறுத்தியது. சில வசனங்களை நீக்கவும் சிலவற்றை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டது. பின்னர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. வழக்கமாகப் புராண படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்குவதுதான் நடைமுறை. மாற்றங்களுக்குப் பிறகு படத்தின் நீளம் 3 மணி நேரம் 2 நிமிடம் 51 விநாடிகளாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory