» சினிமா » செய்திகள்
கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)
கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை (ஜூன் 5ஆம் தேதி) வெளியாகும் நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் நாளை ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் அசத்தி வருகிறது. மொழி குறித்து கமல் பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தக் லைஃப் படம் அங்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழகத்தில் நடிகர் கமலுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)
