» சினிமா » செய்திகள்

ரஜினியுடன் விருது பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி: தனுஷ்

செவ்வாய் 26, அக்டோபர் 2021 11:52:42 AM (IST)ரஜினி விருது பெற்ற விழாவில் நானும் விருது பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ்.இந்த விருது பெறும் விழாவுக்காக ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் என அனைவரும் சென்றிருந்தனர். 

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டபோது விழா அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர். 'அசுரன்' படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் தனுஷ் பேசும்போது, "சின்ன வயதிலிருந்து திரையில் பார்த்துப் பிரமித்துக் கைதட்டி விசிலடித்த எங்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory