» சினிமா » செய்திகள்
தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் இல்லை : எனிமி படத்தயாரிப்பாளர் வினோத்
வெள்ளி 22, அக்டோபர் 2021 4:23:55 PM (IST)
விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள், தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தயாரிப்பாளர் வினோத் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல். அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் ஆதரவு கேட்கிறேன். சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே திரையிட்டால் எப்படி?. எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது. என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய ஷேர் சிறியது தான் என்றாலும் எங்களுக்கு அது கிடைத்துவிடும்.
தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்து ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார். இவ்வாறு அவர் அதில் பேசியிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)
