» சினிமா » செய்திகள்
கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பரிந்துரை
வியாழன் 21, அக்டோபர் 2021 12:45:30 PM (IST)

சர்வதேச விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான மிமி திரைப்படத்தின் பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
லக்ஷ்மண் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி, சாய் தம்ஹான்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான ’மிமி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. பின் இப்படம் விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக படத்தின் கரு அதிகமும் விவாதிக்கப்பட்டதோடு படத்தில் இடம்பெற்ற ‘பரம சுந்தரி’பாடல் இந்தியா முழுவதும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிமி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை 64-வது ‘கிராமி’ விருதுகளுக்கு அனுப்புவதாக ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ரஹ்மான் சர்வதேச அளவில் 2 ஆஸ்கர் விருது, 2 கிராமி விருது, கோல்டன் குளோப் விருது, ஃபாப்தா விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)

தலைவர் 173 படப்பிடிப்பு ஏப்.27-ல் தொடக்கம்: சிபி சக்கரவர்த்தி தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:28:02 PM (IST)

சூர்யாவின் கருப்பு: தெலுங்கு டைட்டில் வெளியீடு!
சனி 4, ஏப்ரல் 2026 11:08:41 AM (IST)

கேரவனில் அத்துமீறியதாக நடிகை புகார்: மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:56:42 PM (IST)

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

