» சினிமா » செய்திகள்

துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிந்தது : கவுதம் மேனன் தகவல்

செவ்வாய் 6, ஜனவரி 2026 5:42:26 PM (IST)


துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

நீண்ட மாதங்கள் கழித்து கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்தப் படம் குறித்த கேள்விக்கு, "அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. விரைவில் அது அடுத்தகட்டத்துக்கு நகரும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். இதன் மூலம் ‘துருவ நட்சத்திரம்’ 2026-ம் ஆண்டில் வெளியாவது உறுதி எனத் தெரிகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் தயாராகி நீண்ட வருடங்கள் ஆனாலும், இதன் மீதான பைனான்ஸ் சிக்கலினால் வெளியாகாமல் இருக்கிறது. இப்படம் வெளியீட்டுக்கு பின்னரே அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கவுதம் மேனன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory