» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இளையோர் உலகக் கோப்பையில் அதிவேக சதம்: ஆஸ்திரேலிய வீரர் புதிய சாதனை!
புதன் 21, ஜனவரி 2026 4:29:08 PM (IST)

இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து ஆஸ்திரேலிய வீரர் சாதனை படைத்தார்.
16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர்.
முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலியா வீரர் முறியடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)


