» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா 28 ரன்கள், ஷிவம் துபே 22 ரன்கள், அக்ஷர் படேல் 21 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல், சிவம் துபே தலா 2 விக்கெட், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாட மாட்டார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 11:13:33 AM (IST)

ஐபிஎல் 2026: சிஎஸ்கே போட்டிகள் முழு அட்டவணை: ஏப்ரல் 23-ல் மும்பையுடன் பலப்பரீட்சை!
வெள்ளி 27, மார்ச் 2026 11:09:53 AM (IST)

சிஎஸ்கே-வின் ஹால் ஆஃப் பேம்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் கௌரவிப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 12:21:52 PM (IST)

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

