» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை 21 ரன்களில் வீழ்த்திய இந்தியா!
சனி 20, செப்டம்பர் 2025 10:32:36 AM (IST)

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவர், 41 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். சர்வதேச டி20 அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு இது 3-வது அரைசதமாக அமைந்தது.
முன்னதாக ஷுப்மன் கில் 5 ரன்களில் ஷா ஃபைசல் பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ராமானந்தி பந்தில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
அக்சர் படேல் 13 பந்துகளில் 26 ரன்களும், திலக் வர்மா 18 பந்துகளில் 29 ரன்களும், ஷிவம்துபே 5 ரன்களும், அர்ஷ்தீப் சிங் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா 13 ரன்களும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 189 ரன்கள் இலக்குடன் ஓமன் அணி பேட் செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹம்மாத் மிர்சா 51 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் 32 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

சர்வதேச தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்துக்கு முன்னேறிய பி.வி. சிந்து
வியாழன் 4, ஜூன் 2026 8:14:14 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)


