» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமன
வெள்ளி 14, மார்ச் 2025 11:50:46 AM (IST)

ஐபிஎல் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்சர் படேல் விளையாடி வருகிறார். இந்த சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடந்தது. இருப்பினும் அவரை விடுவிக்காமல் ரூ.16.50 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது. கேப்டன்சியில் அவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை. உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணியை 23 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார்.
கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழி நடத்தி இருந்தார். அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை அக்சர் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது. "டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஆனதை எண்ணி பெருமை கொள்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்ந்துள்ளேன். மேலும், அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என நம்புகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்” என அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனை ஆறாவது இடத்தில் டெல்லி அணி நிறைவு செய்தது. கேப்டன், பயிற்சியாளர் என நிறைய மாற்றங்களுடன் அந்த அணி இந்த முறை களம் காண்கிறது. வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை டெல்லி எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா!
சனி 15, நவம்பர் 2025 4:33:03 PM (IST)

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 15, நவம்பர் 2025 11:06:06 AM (IST)

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல்முறை: டெல்லியை வீழ்த்தி ஜம்மு - காஷ்மீர் அணி சாதனை!
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:06:45 PM (IST)

தொடர்ந்து 8 சிக்சர் விளாசி மேகாலயா வீரர் உலக சாதனை: 11 பந்தில் அரைசதம் அடித்தும் அசத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 11:12:25 AM (IST)

ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:11:42 AM (IST)

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: கால்இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா தோல்வி!
ஞாயிறு 9, நவம்பர் 2025 8:31:20 AM (IST)


.gif)