» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் அணி!
வியாழன் 27, பிப்ரவரி 2025 11:47:25 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 326 ரன் இலக்கை நோக்கி பேட் செய்த இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. 49.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை சுவைத்தது. ஒமர்சாய் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஜட்ரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது.
இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை ஆச்சர்யம் என்று உங்களால் வர்ணிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் வெற்றியை தற்போது பொழுதுபோக்காக உருவாக்கியுள்ளார்கள். இப்ராகிம் சூப்பரான சதமடித்தார். ஒமர்சாய் அற்புதமாக 5 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தானுக்கு நினைவுகரமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். நன்றாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)
