» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
முருகப்பா ஹாக்கி: இந்தியன் ரயில்வேஸ் அணி சாம்பியன்
திங்கள் 4, செப்டம்பர் 2023 10:50:23 AM (IST)
முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
94-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வெற்றிபெற்ற அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.