» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஹாக்கிப் துவக்கம் : பீகார், ஜார்க்கண்ட் அணிகள் வெற்றி!
செவ்வாய் 17, மே 2022 4:01:09 PM (IST)

கோவில்பட்டியில் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று தொடங்கியது. முதல் 3 போட்டிகளில் பீகார், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் வெற்றி பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி இன்று காலை தொடங்கியது. வரும் 29ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் பங்கேற்றுள்ளனர்.
540 வீரர்கள் பங்கேற்கும் 50 போட்டிகள் நடைபெறுகிறது.8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. லீக் போட்டி முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 2 அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும், அதன் பின்னர் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இறுதி போட்டிகள் 29ந்தேதி நடைபெற உள்ளது.இன்று மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறவுள்ளது.இருப்பினும் போட்டிகள் இன்று காலையில் தொடங்கி விட்டன.
முதல் போட்டியில் குருப் இ பிரிவில் உள்ள பீகார் மாநில ஹாக்கி அணியும், அசாம் மாநிலம் ஹாக்கி அணியும் மோதின.போட்டிகள் தொடங்கியது முதல் பீகார் ஹாக்கி அணி வீரர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டி தொடங்கியது முதல் அடுத்தடுத்து கோல்களை அடிக்க தொடங்கினர். போட்டியின் முடிவில் 11 - 1 என்ற கோல் கணக்கில் பீகார் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
2வது போட்டியில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள அருணாச்சல பிரதேசம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சம பலத்தில் விளையாடிய போதிலும், பின்னர் அருணாச்சல பிரதேச அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆட்டம் ஆடி கோல்கள் அடிக்க தொடக்கினர். போட்டியின் இறுதியில் 5 - 0 என்ற கோல்கணக்கில் அருணாச்சல பிரதேசம் ஹாக்கி அணி வெற்றி பெற்றது
3வது போட்டியில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் - கோவா ஹாக்கி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதல் ஜார்க்கண்ட் வீரர் விறுவிறுப்பாக விளையாடி கோல்களை அடிக்க தொடங்கினர். அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியை முன்னிலைப்படுத்தியது மட்டுமின்றி போட்டியின் இறுதியில் 10 - 0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது. காலையில் நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி அணிகள் மொத்தம் 26 கோல்கள் அடிக்கப்பட்டன. தோல்வியுற்ற அணிகளில் அசாம் ஹாக்கி அணி மட்டும் ஒரே ஒரு கோல் அடித்து இருந்தது குறிப்பிடதக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)



.gif)