» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்
திங்கள் 9, மே 2022 11:51:15 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான ஆண்கள் ஹாக்கி லீக் போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி, இலுப்பையூரணி ஹாக்கி அணி,திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணி, தாமஸ் நகர் ஹாக்கி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன
நேற்று காலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியினரும் இலுப்பையூரணி ஹாக்கி அணியும் மோதின. இதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியினரும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 4 -1என்ற புள்ளி கணக்கில் தாமஸ் நகர் ஹாக்கி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 7 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.மேலும் மண்டல அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இறுதி போட்டியில் முருகன், கார்த்திக் ராஜா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குரு சித்ரா சண்முக பாரதி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் , தொழில் அதிபர் சுபாஷ் பில்டர்ஸ் சண்முகராஜா, காளிமுத்து பாண்டிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)



.gif)